தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், 11ஆம் வகுப்பு படிக்கும்போதே மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின்னர், மீண்டும் ஒருமுறை அதே பாடங்கள்
12ஆம் வகுப்பில் நடத்தப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தொடங்கும்போது மட்டுமே, அதற்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அரையாண்டுத் தேர்வுக்குமுன்பே அனைத்துப் பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அரையாண்டுத் தேர்வுக்குமுன்பு, நவம்பர் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் 'முன் அரையாண்டுத் தேர்வு' என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரையாண்டுத் தேர்வுக்குமுன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக்காலமும் வருகிறது. இந்நிலையில், மற்றொரு தேர்வு வைத்தால் பாடம் நடத்துவது பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறுகையில், “ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. பண்டிகை விடுமுறைகளை சமாளிப்பதற்கே திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டுத் தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது என தெரிவித்தார்.
இந்தக் கல்வி ஆண்டில் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அதைச் சமாளிக்க, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாகத்தான் அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.