ஐந்து ரூபாய் டீக்கு இன்டர்நெட் ப்ரீ!

இப்படியும் வியாபாரம் செய்யலாம்’ என, கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய டீ கடை வியாபாரத்தை அதிகரிக்க புதிதாக ஒரு அசத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவைச் சேர்ந்தவர் சையது காதர் பாஷா(23). இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவரது
கடையில் வியாபாரம் பெரிதாக நடைபெறாதநிலையில் இவர் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். தன் கடைக்கு டீ குடிக்க வருபர்களுக்கு அரைமணி நேரம் ’இன்டர்நெட் ப்ரீ’ என்று அதிரடி முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

அவருடைய கிராமத்தில் இளைஞர்கள் அதிகமாக இருப்பதைக் கவனித்துள்ளார். எனவே, அவர்களைக் கவர இலவச இன்டர்நெட் வசதி அளிப்பது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை செய்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ரூ.3,000க்கு வைஃபை ரவுட்டர் வாங்கி, அதில் மாதந்தோறும் ரூ.1,700க்கு அன்லிமிடெட் இண்டர்நெட் வசதியை ஏற்படுத்திக்கொண்டார். இதன்பின், தனது கடைக்கு டீ குடிக்க வருபவர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறார். ஐந்து ரூபாய்க்கு டீ வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வோர்டு கூப்பனை வழங்குகிறார். இதன்மூலம் வாடிக்கையாளர்கள், 30 நிமிடங்கள் இலவச இண்டர்நெட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் முடிந்தபின் தானாகவே நெட் தொடர்பு துண்டிக்கும்படி செய்துள்ளார். மேலும் ஒருநாளில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த வசதி பல்லாரி மாவட்ட இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய இளைஞர்கள் பலரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் பெரும்பாலான இளைஞர்கள் பாஷாவின் கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு இணைய வசதியை பயன்படுத்திச் செல்கின்றனர்.

இதனால் முன்பு, நாளொன்றுக்கு 1௦௦ கப் டீ வியாபாரம் செய்து வந்தவர் தற்போது, தினசரி 400 கப் டீ விற்று வியாபாரத்தை பெருக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இப்பகுதி இளைஞர்களுக்கு வீட்டில் குறைந்த அளவே காசு கொடுப்பார்கள். அதைவைத்து, அவர்களால் செல்போனுக்கு மாதாந்திர டேட்டா பேக் போட முடிவதில்லை. இந்நிலையில், அவர்களுக்கு உதவும்வகையிலும் என்னுடைய வருமானத்தைப் பெருக்கும்வகையிலும் இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார். இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கல்லூரி மாணவர்களே என்று தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு படித்த இவர், தன் வியாபாரத்தைப் பெருக்குவதற்கு சரியான முறையில் இந்த முயற்சியை மேற்கொண்டது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...