மக்கள் நீதிமன்றம்: ஒரு லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக்குழு பிரிவு 19இன் படி, மக்கள் நீதிமன்றம், மூன்று பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞராக இருப்பார்.



இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், ஒரு லட்சத்து 549 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக மொத்தம் ரூ. 91.48 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவரும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியுமான அனில் ஆர்.தவே உத்தரவுப்படி நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 2ஆம் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் ஆகியோரின் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், தொலைபேசி, வாகன விபத்து இழப்பீடு, சொத்து வரி, திருமணப் பிரச்னை, தொழிலாளர் நலன், வங்கி, பொதுமக்கள் பயன்பாடு தொடர்புடைய நிலுவை வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் பட்டியலிடப்பட்டு மொத்தம் 255 அமர்வுகளில் நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரித்தனர். இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 549 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடாக மொத்தம் ரூ.91,48,29,570 வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்காராமன் தலைமையில் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவினரும், நீதித்துறை ஊழியர்களும் செய்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம், மக்கள் நீதிமன்றத்தில் ரூ.83 கோடி மதிப்பிலான 58,437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...