சென்னை பெண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய்!!!

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது, நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில்

இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் கடந்த, சில தினங்களுக்குமுன் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்தது.

இந்நிலையில், இந்தியாவிலேயே சென்னையில்தான் பெண்களுக்கு அதிகளவில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நிகழ்ச்சிகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இதை அனுசரிக்கும்வகையில் மெரினா காந்தி சிலை அருகிலிருந்து இன்று காலை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் கூறியதாவது: இம்மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இந்தியளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் சென்னையில்தான் அதிகப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, இந்திய அளவில் சென்னை 28 சதவிகிதப் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 67% சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர். எனவே, பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்பெல்லாம் 5௦ வயதுக்கும் மேல் உள்ள பெண்கள்தான் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 3௦ வயதுக்கும் மேலான பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவர்களும் மருந்துகளும் இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளையும் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளையுமே மக்கள் நம்பியிருக்க வேண்டிருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...