காத்திருந்தவர்களுக்கு விரைவில் கிடைக்கும்
திருப்பூர்: தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கலாம் என, கலெக்டர் அனுமதி வழங்கியதால், ஆறு மாதங்களாக காத்திருந்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 2015 டிச., மாதம் முதல் விண்ணப்பித்தவர்கள், புதிய ரேஷன் கார்டு கிடைக்காமல் காத்திருக்கின்றனர். மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும் சேர்த்து, 4,300க்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் அச்சிடாமல் வைக்கப்பட்டிருந்தது. வெளிமாநில, வெளிமாவட்ட மக்கள் அதிகம் உள்ளதாலும், புது கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளதாலும், புதிய கார்டு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கடந்த, எட்டு மாதங்களாக, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், புதிய கார்டு கிடைக்காமல் காத்திருந்தனர். தங்களது பெயர்களையும் நீக்கிவிட்டு, விண்ணப்பம் செய்ததால், குடியிருப்பு சான்று கிடைக்காமல், பல்வேறு அரசு தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை நீடித்து வந்தது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காத்திருப்பதால், மாவட்ட நிர்வாகம் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டுமென, கடந்த, 15ம் தேதி, "தினமலர்' திருப்பூர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, மாவட்டத்தில் தேங்கியுள்ள விண்ணப்பங்களில், தகுதியான யனாளிகளுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க, கலெக்டர் ஜெயந்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம், கடந்த, 2015 டிச., மாதம் முதல், விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் வாய்ப்பு கூடி வந்துள்ளது.
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறுகையில்,"பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவற்றை தேர்வு செய்வதற்காக, நீண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தகுயான மனுதாரர்களுக்கு கார்டு அச்சிட்டு வழங்க, கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார்.
குடும்ப தலைவர் மற்றும் மனைவி ஆகியோரின், ஆதார் அட்டை நகல் இணைத்திருந்தால், அவர்களுக்கு கட்டாயம் ரேஷன் கார்டு கிடைக்கும். ஆதார் அட்டை நகல் இணைக்காத விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும்,' என்றனர்.