நாளை மறுநாள் முதல் சென்னை உயர் நீதிமன்றம் விடுமுறை !

தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை கால நீதிமன்றம் 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும். விடுமுறை கால நீதிபதிகளாக நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர்.
அதேபோல், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.   

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...