பாகிஸ்தான்தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துங்கள் !!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதன் மூலம், இந்தியாவின் நிலையான ராஜதந்திர நடவடிக்கை மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த 2014ம் வருடம் அக்டோபர் 7 ம் தேதி எல்லை பாதுகாப்பு படையினரை சந்தித்த அஜித் தோவல், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்க
வேண்டும். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அவர்கள் தாக்குதலை நிறுத்தும் வரை, அவர்கள் மீது கடுமையாக தாக்குவதுடன், அவர்களின் உள்கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும்.

அவர்கள் ஒருமுறை சுட்டால், அதற்கு இரண்டு முறை சுட்டு பதிலடி தடுக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாகிஸ்தான் ராணுவத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது எனவும் கூறினார். இதுபோன்ற உத்தரவுகள் காரணமாகவே தற்போது, பாகிஸ்தான் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்தியாவின் இந்த மாற்றம் பா.ஜ., ஆட்சியேற்ற பிறகு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பாகிஸ்தான் அதிகாரி உமர் புர்கி என்பவர், பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியா மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, தக்க பதிலடி கொடுக்கும்படி அஜித் தோவலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தும் உத்தரவிட்டனர். தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்தியாவின் தாக்குதலை நிறுத்தும்படி பாக்., அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

அஜித்தோவல் ஆலோசனைபடியே, கடந்த வருடம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரை தொடர்ந்து நடத்தினால், பாகிஸ்தான் அதிக ரத்தம் சிந்த வேண்டி வரும் என கடுமையான செய்தியை இந்தியா தெரிவித்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் கண்டனங்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த போது, இ்நதியாவின் கண்டனங்கள் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ராணுவ அதிகாரி நடவடிக்கை எடுக்கும்போது அது வேறுமாதிரியாக இருக்கும். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது, எல்லை பாதுகாப்பு படையும், ராணுவத்தினரும் அமைதியாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துங்கள் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.




இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு முதல் குஜராத் வரை உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீவிர ரோந்துபணியிலும் ஈடுபடவும், எல்லையில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...