சமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு!!

சமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு நவம்பர் 30–ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மானியம்

ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்கள் வீதம் மானிய விலையில் சமையல் கியாஸ் வழங்கப்பட்டு
வருகிறது. சந்தை விலையில் சமையல் கியாஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அதற்குரிய மானிய தொகை, சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மானியத்தைப் பெற ‘ஆதார்’ எண் கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே சமயத்தில், இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு நவம்பர் 30–ந் தேதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.மத்திய அரசு அறிவிப்பு

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–அரசின் சேவைகள், பயன்கள், மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு ‘ஆதார்’ எண் ஒரு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அரசின் பணிகளை எளிமைப்படுத்துவதுடன், ஒளிவுமறைவற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. பயனாளிகள் நேரடியாக பயனை பெற உதவுகிறது.சமையல் கியாஸ் மானியம் என்பது நாட்டின் தொகுப்பு நிதியத்தில் இருந்து அளிக்கப்படும் செலவு என்பதால், அந்த பயனை பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்படுகிறது.ஆதார் எண்

எனவே இனிமேல், சமையல் கியாஸ் மானியம் பெற விரும்புபவர்கள், ஆதார் எண் வைத்திருப்பதற்கான நிரூபணத்தை அளிக்க வேணடும். இதுவரை, ஆதார் எண் பெறாதவர்கள், ஆதார் எண் பதிவுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30–ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆதார் எண் பதிவுக்கான வசதிகளை செய்து தருமாறு எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.அவர்களுக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் பதிவு செய்ததற்கான அடையாள ரசீது அடிப்படையிலோ, அல்லது, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கான பாஸ்புக், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ஆதார் பதிவு ரசீது அடிப்படையிலோ அவர்களுக்கு சமையல் கியாஸ் மானியம் அளிக்கப்படும்.உறுதிமொழி

மேலும், ஒரு நுகர்வோர், ஒரு நுகர்வோர் எண்ணைத்தவிர, வேறு நுகர்வோர் எண்ணில் சமையல் கியாஸ் மானியம் பெறவில்லை என்று ஒரு உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்.இந்த அறிவிக்கை, அசாம், மேகாலயா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தவிர, நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...