அடுத்தாண்டு ஏப்ரல் முதல் ஜி.எஸ்.டி., அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்!!!

''வரும் ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி., அமல்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

டில்லியில், நேற்று நடந்த, பார்லி., ஆலோசனை குழுவின் நான்காவது கூட்டத்தில்,
அவர் பேசிய தாவது: வரும் ஏப்., முதல், ஜி.எஸ்.டி., எனப் படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு சட்டத்தை அமல்படுத்துவதில், அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகள், வேகமாக நடந்து
வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முதல் கூட்டம், திருப்தி கரமாக அமைந்தது. ஆண்டு மொத்த விற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு கீழ்உள்ளவர் களுக்கு, இந்த வரி விதிப்பில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்களில், இந்த உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயாக இருக்கும். மேலும், 1.5 கோடி ரூபாய் ஆண்டுக்கு நிகர விற்பனை செய்வோர், மாநில வரி விதிப்பின் கீழ் வருவர்.

அதற்கு மேற்பட்டோர், மத்திய அல்லது மாநில வரி விதிப்பின் கீழ்வருவர். இதற்கான வழிமுறை, விரைவில் வகுக்கப்படும்.

நாடு முழுவதும் ஏற்கனவே உள்ள, 11 லட்சம் சேவை வரி பதிவு செய்துள்ளவர்கள், மத்திய வரி விதிப்பின் கீழ் வருவர்.மாநிலங்களுக்கான வரி இழப்பீட்டை, ஈடு செய்வதற்கான அடிப்படை ஆண்டாக, 2015 -- 16 நிதியாண்டு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.

கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரைவு சட்டம், எந்தெந்த துறைக்கு விலக்கு போன்றவை குறித்து ஆராயப்படும். அக்.,17 முதல்,19 வரை நடைபெறும் கூட்டத்தில், வரி விகிதம் குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...