ரயில் கட்டண சலுகை பெற 'ஆதார்' கட்டாயம்!!

ரயில் பயண கட்டணத்தில், பல்வேறு சலுகைகளை பெறுவோர், முன்பதிவின் போது, இனி, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

'ஆதார்' கட்டாயம்:


பல்வேறு அரசின் மானியங்கள், சலுகைகளை போலிகள் பெறுவதை தடுக்கும் வகையில், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் என, பல்வேறு தரப்பினருக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இது, உரியவர்களுக்கு மட்டும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முன்பதிவின் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

விரைவில் அமல்:

'இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன; விரைவில், இந்த திட்டம் அமலுக்கு வரும்' என, ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...