பைக் தயாரிப்பில் புதுமை : திண்டுக்கல் மாணவர்களுக்கு பரிசு !

தேசிய அளவிலான இருசக்கர வாகன தயாரிப்பு போட்டியில், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.கல்லுாரி மாணவர்கள் பரிசு பெற்றனர்.

பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த மாதம் கோவையில் நடந்தது. திண்டுக்கல்
எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோமொபைல் துறை மாணவர்கள், 80 சி.சி., 'மினி பைக்', 'சோலார் பைக்', 'இ- பைக்' ஆகியவற்றை தயாரித்து போட்டியில் பங்கேற்றனர். இதில் 'இ- பைக்' இரண்டாவது பரிசு, மற்ற பைக் வகைகள் சிறப்பு பரிசு பெற்றன.

உருவாக்கம், ஒருங்கிணைப்பு, செலவு, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டது.




'இ- பைக்' தயாரித்த வினோத்குமார், ஜெகன், குல்தீபக், ஜீவானந்தம், பாண்டீஸ்வரி, செரரின் பாத்திமா கூறியதாவது: இந்த பைக் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது. தயாரிப்பு செலவு 27 ஆயிரம் ரூபாய். தினமும் 2 யூனிட் மின்சாரத்தை சார்ஜ் செய்தால் போதும்; இதில் 48 கி.மீ., வரை செல்லும். பதிவு செய்த கைரேகையை வைத்தால்தான் 'ஸ்டார்ட்' ஆகும். இயக்குனர்
சந்திரன், முதல்வர் சீனிவாசன், துறை தலைவர் சிவக்குமார், இயந்திரவியல் துறை தலைவர் சரவணன், பேராசிரியர் ராஜவேல் ஆலோசனை வழங்கினர். இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு உதவ வேண்டும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...