உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள்!!

கட்டுப்பாடற்ற வகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது, பணியிடங்களில், உற்பத்தித் திறனை பாதிப்பதாக, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு :
சமூக வலைதள பயன்பாடு குறித்து, சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவு விபரம்:
சராசரியாக ஒவ்வொரு வரும், ஒரு நாளில், 32 சதவீத நேரம், சமூக வலைதளத்தில் செலவிடுகிறார். பணியிடங்களில், சராசரியாக, ஒவ்வொரு ஊழியரும், 2:35 மணி நேரம்,சமூக வலைதளங்களே கதி என கிடக்கின்றனர். இதனால், உற்பத்தித் திறன், 13 சதவீதம் பாதிக்கிறது.

வேலைக்கே முக்கியத்துவம் :


தொழில் நிறுவனங்கள், கண்மூடித்தனமாக விதிமுறைகளை வகுப்பதை விடுத்து, வேலை நேரத்தை, ஊழியர்கள் தவறாக பயன்படுத்துவதற்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும். பணியிடத்தில், செய்யும் வேலைக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும்.

பணிநேரத்தில் 'பேஸ்புக்' :

சமூக வலைதளங்களை, அதிகளவில் ஊழியர்கள் பயன்படுத்துவதால், உற்பத்தித் திறன் பாதிப்பதோடு, ரகசிய தகவல்கள் கசிவதும் அதிகமாகி வருகிறது. சமூக வலைதளங்களில், 'பேஸ்புக்'கை, ஊழியர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 83 சதவீத ஊழியர்கள், பணிநேரத்தில், 'பேஸ்புக்'கை பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...