தஞ்சையில் அமையுது 'எய்ம்ஸ்':மத்திய அரசு அறிவிப்பில் தாமதம் ஏன்??

தமிழகத்தில், தஞ்சை செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் உள்ளதால், முறையான அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


மாநில அரசுக்கு கடிதம்
'டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை யின் கிளை, தமிழகத்தில் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 'ஒரே பகுதியில், 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து கொடுங்கள்' என, மாநில அரசுக்கு கடிதம்

எழுதியது.



தமிழக அரசும், முழு வீச்சில் களமிறங்கி, மதுரை - தோப்பூர்; ஈரோடு - பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களில், தலா, 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, அது பற்றிய விபரத்தை, மத்திய அரசுக்கு அனுப்பியது.



பின், மத்திய சுகாதார துறை இணைச் செயலர், தாய்த்ரி பாண்டா தலைமையில், ஐவர் குழு, 2015 ஏப்ரலில், தமிழகம் வந்தது. இரு நாட்கள் தங்கி, ஐந்து இடங்களையும் ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனால், எந்த இடத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என, தமிழக மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.



ஆனால், மத்திய குழு ஆய்வு முடிந்து, ஒன்றரை ஆண்டுகளாகியும், இது குறித்த அறிவிப்பு வெளியாகாதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.




இது குறித்து, சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:




மத்திய குழு பரிந்துரைப்படி, தஞ்சை - செங்கிப்பட்டி; மதுரை - தோப்பூர் என, இரு இடங்கள், இறுதி கட்ட பரிசீலனையில் உள்ளன. மதுரையில், மருத்துவக் கல்லுாரி மற்றும் நவீன வசதிக ளுடன் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மாவட்டத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல்,

மருத்துவ மனைகள் மேம்பாட்டுப் பணிகளும் நடந்து வருகின்றன.



எனவே, தஞ்சை - செக்கிப்பட்டியில், எய்ம்ஸ் கிளை அமைக்கலாம் என, மத்திய அரசு முடிவுக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



நிதி ஒதுக்கப்படும்:



'தமிழகம் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், எய்ம்ஸ் கிளை அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. முதற்கட்டமாக அறிவித்த, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அது முடிந்ததும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, நிதி ஒதுக்கப்படும்.



இந்த நிதி சிக்கல் காரணமாகவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, தமிழகத்தில், எய்ம்ஸ் கிளை அமைவதில், வேறு எந்த சிக்கலும் இல்லை என, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...