மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி பலி !

கோயில் குளத்தில் குளித்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர், நீரில் மூழ்கி இறந்தனர்.

சென்னை திருவான்மியூர், திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஷ்ணுவர்தன்; அவ்வை நகர் பொன்.பாஸ்கர்ராஜ்; நீலாங்கரை புதுகணேஷ் நகர் விக்னேஷ்; நீலாங்கரை ஹரிஹரன்; பி.விக்னேஷ்,17, ஆகியோர் நண்பர்கள்.




ஐந்து பேருக்கும், 17 வயதாகிறது; திருவான்மியூர் சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று காலை, 11 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் கவுரிஅம்மன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.



ஒருவர் ஒருவராக குளத்தில் இறங்கியுள்ளனர். குளத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டபத்திற்கு, நீச்சல் அடித்த படியே ஐந்து பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர். ஒரு முறை செல்லும் போது, விக்னேஷ், மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற ஒவ்வொருவராக குளத்தில் இறங்கியுள்ளனர்; அனைவரும் மூழ்க துவங்கினர்.



இதைப் பார்த்தவர்கள், அந்த சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர்; தத்தளித்துக் கொண்டிருந்த ஹரிஹரன், பி.விக்னேஷ் ஆகியோரை மட்டுமே மீட்க முடிந்தது.பொன்.பாஸ்கர்ராஜ், விஷ்ணுவர்தன், விக்னேஷ் ஆகியோர் குளத்தின், சேற்றில் சிக்கி, மூழ்கி இறந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



விரைந்து சென்ற நீலாங்கரை போலீசார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீனவர்கள் படகுகள் மூலம் உடல்களை மீட்டனர். மூன்று பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...