தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேலு காலமானார். எனவே, இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வருகிற நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக வெளியிட்டுவரும் நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை நடக்கும் இந்த வேட்புமனு தாக்கல் முடிந்து, பின்னர் நவம்பர் 3ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நவம்பர் 5 கடைசி நாள் என்றும், அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.