அரசு ஊழியர்கள் சங்கங்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை!!
புதுடெல்லிஅரசின் கொள்கைகள், செயல்பாடுகளை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.அதிகாரிகள் விமர்சனம்
இந்திய வருவாய் சேவை(சுங்கவரி மற்றும் மத்திய உற்பத்தி வரித்துறை) அதிகாரிகள் சங்கம் மற்றும் மத்திய உற்பத்தி வரி நிர்வாகிகளின் அகில இந்திய கூட்டமைப்பு ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரி ஒருங்கிணைப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு வெளிப்படையாக கோரிக்கை விடுத்து இருந்தன.இது அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை விமர்சிப்பது போல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளை சுட்டிக்காட்டி கூறப்பட்டு இருப்பதாவது:–ஒழுங்கு நடவடிக்கை
அரசு பணியில் உள்ள ஊழியர்கள் சங்கங்களும், சில கூட்டமைப்புகளும் சமீபத்தில் மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும் மிகவும் பாதகமான முறையில் விமர்சனம் செய்திருப்பது குறித்து எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.இதுபோல் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக யாரும் தூண்டிவிடுவதும், அரசின் செயல்பாடுகளையும், குறைகளையும் விமர்சிப்பதும் கூடாது. இதை மீறி அரசுத்துறை சங்கங்களோ, அவற்றின் கூட்டமைப்புகளோ விமர்சனம் செய்தால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.விதிமுறை
அரசின் எந்த ஊழியரும் வானொலி, தொலைக்காட்சி, மின்னணு ஊடகம் மூலம் தன்னுடைய பெயரிலோ, பெயரை தெரிவிக்காமலோ, கற்பனை பெயரிலோ அல்லது மற்றவர்களின் பெயர்களிலோ தொடர்பு கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய கொள்கைகள் பற்றியோ, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் குறித்தோ அல்லது அரசின் நடவடிக்கைகள்மீதோ பாதகமான எவ்வித கருத்தையும் விமர்சனத்தையும் தெரிவிக்க கூடாது என்பது விதிமுறை ஆகும்.அரசு ஊழியர்களது சேவை சங்கங்களின் முக்கிய நோக்கம் அதன் உறுப்பினர்களின் நலன்களை மேம்படுத்தவேண்டும் என்பதுதான். எனவே அதன் அடிப்படையில்தான் இந்த சங்கங்களின் செயல்பாடுகள் அமையவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.