இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசியல் சாசனப்படி தேசிய மதுவிலக்கு கொள்கையை வகுக்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாகவும், அந்த அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, தனது மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறிய அஸ்வினி உபாத்யாயா, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் முறையிடப்போவதாக தெரிவித்தார்