ரேஷன் ஊழியர்கள் போராட முடிவு !

ரேஷன் பொருட்களை எடை போட்டு வழங்கக் கோரி, ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. அவற்றின் எடை குறைவதாக, ரேஷன் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

வாணிப கழக அதிகாரிகளும், லாரி டிரைவர்களும், ரேஷன் பொருட்களில் கை வைக்கின்றனர்.

அதனால், கடைகளுக்கு, குறைந்த எடையில் பொருட்கள் வழங்கப்பட்டு, ரேஷன் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு தீர்வு காண, கடைகளுக்கு பொருட்களை இறக்கும் போது, எடை போட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் தமிழகம் முழுவதும், விடுப்பு எடுத்தும், ரேஷன் கடைகளை மூடியும், போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...