அமெரிக்காவின் டெக்சாஸ் லாமர் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணை பேராசிரியருக்கு அமெரிக்கா ஆடியாலஜி அகாடமி மூலம் 'ஜெர்கர் எதிர்கால ஆடியாலஜியின் தலைவர்கள்-2016’ என்ற பட்டம் கிடைத்துள்ளது. இதற்காக, நாடு தழுவிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் விநாயக மஞ்சய்யாவும் ஒருவர்.
ஆடியாலஜி என்பது செவித்திறன், செவிச் சமநிலை மற்றும் அது தொடர்புடைய கோளாறுகள் போன்றவற்றை ஆய்வுசெய்யும் அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விநாயக மஞ்சய்யா, ஸ்வீடன் லீங்கோபிங் பல்கலைக்கழகத்தில் செவித்திறன் கேட்பு இயலாமை ஆராய்ச்சியில் பி.எச்டி., பட்டம் பெற்றவர். லண்டன் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆப் ஆடியாலஜி, சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். ஆடியாலஜி மற்றும் இந்தியாவில், மைசூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. ஸ்பீச் அண்டு ஹியரிங் என்ற பட்டப் படிப்பையும் உயர் கல்வியையும் முடித்துள்ளார்.
இந்தத் துறையில் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவ அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார் மஞ்சய்யா. மேலும் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இந்த அரசு சாரா அமைப்பு, இந்தியாவில் காது மற்றும் செவித்திறன் சுகாதாரத்தை மேம்படுத்த முற்படுகிறது.
உலகளவில் காது சம்பந்தப்பட்ட மிகப்பெரிய தொழில்முறை அமைப்பாக அமெரிக்க ஆடியாலஜி அகாடமி உள்ளது. அதிலுள்ள உறுப்பினர்கள் கல்வி, ஆராய்ச்சி, பொதுமக்களிடம் செவித்திறன் சமநிலைக் கோளாறுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதும், அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கியப் பணியாக உள்ளது. இவ்வமைப்பின் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மஞ்சய்யா என்பது குறிப்பிடத்தக்கது.