காலாண்டு தேர்வில், பாடவாரியாக தோல்வியடைந்த மாணவர்களின் பட்டியல் மற்றும், மதிப்பெண் சதவீதத்தை தயாரித்து, சிறப்பு வகுப்பு நடத்துமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 255 அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வு பாணியில், ஒரே வினாத்தாள் கொண்டு நடத்தப்பட்டது.
இதில், வகுப்பு வாரியாக, முக்கிய பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண் சதவீதம், தோல்வியடைந்தோர் பட்டியல் தயாரிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், மாநில தரத்திலான மதிப்பெண் பட்டியலில், இடம்பெறும் நோக்கில், காலாண்டு தேர்வு முடிந்ததும், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுசார்ந்த அறிவிப்பு, அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.