காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்து கட்சி களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று வைகோ கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் வழங்க 3 தீர்ப்புகள் வழங்கியும், அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு சொட்டு தண்ணீரை கூட
தமிழகத்துக்கு தர இயலாது என அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் 3 பேர் கலந்து கொண்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக கர்நாடக அரசு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட 3 மத்திய மந்திரிகளை நீக்கம் செய்ய மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ரெயில் மறியல்
காவிரி பிரச்சினையில் முறையாக சட்டப்படி போராடியவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்பதை விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்கிறேன். தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக செயல்பட முடியாமல் உள்ளார். காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வருகிற 17, 18-ந் தேதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.