தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற நாளைக்குள் விண்ணப்பிக்கவும் !!

 தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைபெற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் தொழிலாளர் நல வாரிய ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள், தங்களது கல்வி

பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க 11ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதியுதவி அளித்தல், பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும். விண்ணப்பங்களை, 'செயலாளர், தமிழ்நாடு நல வாரியம், தபால் பெட்டி எண், 718, தேனாம்பேட்டை, சென்னை-6' என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அல்லது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின், 24321542 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...