இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய்!!!

கோவையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தன் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் கோவை தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் தனியார் அமைப்புகள் சார்பில் கோவையில் மாரத்தன் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளாக மாரத்தன் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை கோவை மாநகர மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். தடகள வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இது தவிர, மூத்த குடிமக்களுக்கான மாரத்தன் போட்டியில் 88 வயதான முதியவர் மற்றும் 76 வயதான மூதாட்டி பங்கேற்றனர்.

இந்த மாரத்தன் மூலம் கிடைக்கும் நிதி தொகையைப் புற்றுநோய் கண்டுபிடிக்கும் முகாம்கள் நடத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் வருடம் மட்டுமே 4.91 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2012-2014 ஆகிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டுமே புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஏறத்தாழ 6% அதிகரித்துள்ளது. இந்தியாவில் 70% மேலான புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 30 - 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2011இல் 10,28,503 பேர், 2012இல், 10,57,204 பேர், 2013இல் 10,86,783 பேர், 2014இல் 11,17,269 பேர் என்ற எண்ணிக்கையில் இந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...