தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை திடீரென ஐகோர்ட் ரத்து செய்து விட்டதால் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் வேறு பணிகளை பார்க்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடலுார் மாவட்டத்தில் 17, 19 என இரண்டு கட்டமாக நடப்பதாக
அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மனு தாக்கல் 26ம் தேதி துவங்கி அக்டோபர் 3ம் தேதி முடிவடைந்தது.
தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.
அதற்காக அரசு துறையில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஐகோர்ட் திடீரென தேர்தலை ரத்து செய்தது.
மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய பதவிக்கான தேர்தலை நடத்த சுமார் 28 ஆயிரம் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக மற்ற பணிகளை பார்க்காமல் தேர்தல் பணிகளை மட்டும் பார்க்குமாறு பணிக்கப்பட்டனர்.
இதனால், ஏற்கனவே கவனித்து வந்த பணிகள் யாவும் முற்றிலும் முடங்கிப் போயின. இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு பின் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், தேர்தல் பணிகளை தொடர வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தேர்தலில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தேர்தல் பணிகளை பார்க்காமல் முடங்கியுள்ளனர்.
இது குறித்து தேர்தல் பணிகளை கவனித்து வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஐகோர்ட் தேர்தலை ரத்து செய்ததற்கு பின் மற்ற தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை பணிகள் ஏதும் செய்யாமல் காத்திருக்கின்றோம்' என்றார்.