ஜன்தன் வங்கி கணக்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதித்து பாரத ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை விதித்தது. டெபாசிட் தொகை திடீரென அதிகரித்து இருப்பதால் இந்நடவடிக்கையை ரிசர்வ் வங்கி முன்னெடுத்து உள்ளது. ரூ.500,
ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி முதல் நவம்பர் 23-ந்தேதி முடிய 14 நாட்களில் மட்டும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ஆச்சரியப்படுத்தக்க வகையில் ரூ.27 ஆயிரத்து 200 கோடி கூடுதலாக டெபாசிட் செய்யப்பட்டது. நவம்பர் 9-ந்தேதி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.45 ஆயிரத்து 636 கோடியாக இருந்தது. நவம்பர் 23-ந்தேதி நிலவரப்படி டெபாசிட் தொகை ரூ.72 ஆயிரத்து 834 கோடியானது. கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி பேசுகையில், கருப்பு பணத்தை மாற்ற நினைப்பவர்கள் துரதிஷ்டவசமாக இந்நடவடிக்கையில் ஏழை மக்களை பயன்படுத்துகின்றனர், ஏழை மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி அவர்களது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கின்றனர். பினாமி பரிவர்த்தனைகளை கையாள மிகவும் கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படும், அவை இதுபோன்ற பரிவர்த்தனைகளை கடிமானதாக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஜன்தன் கணக்குகளில் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ள இயலும். இதை பயன்படுத்தி கருப்பு பணம் வைத்திருப்போர் தங்களுக்கு தெரிந்த ஏழைகள், விவசாயிகள், கிராமப்புற மக்கள் மூலம் ரூ.49 ஆயிரம் வரை டெபாசிட் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் பணம் இப்படி டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது.இதையடுத்து, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போர் பணத்தை எடுப்பதற்கு புதிய நிபந்தனையை வெளியிட்டு உள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய படிவத்தை (கே.ஒய்.சி) வங்கிகளில் சமர்ப்பித்து இருந்தால் அவர்கள் மாதம் அதிக பட்சமாக ரூ.10 ஆயிரம் எடுக்கலாம். வங்கியில் தங்களது விவரங்களை தெரிவிக்காதவராக இருந்தால் ஜன்தன் கணக்கில் அவர்களால் மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.அதே நேரம் ஜன்தன் கணக்கு வைத்திருப்போருக்கு வங்கி கிளை மேலாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை திரும்ப எடுக்க அனுமதிக்கலாம். வாடிக்கையாளர்கள் இப்படி பணம் எடுப்பதற்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்ட பிறகு கூடுதல் தொகையை கிளைமேலாளர்கள் வழங்கலாம். மாதத்துக்கு ரூ.10 ஆயிரம்தான் எடுக்கலாம் என்பது தற்காலிக நடவடிக்கைதான். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 25 கோடியே 68 லட்சம் ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 23 சதவீத கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.