வடகிழக்கு பருவ மழை காலத்தில், வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாப்பதற்காக, 1,100 கல்லுாரி மாணவர்களுக்கு, முதல் உதவி பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை பல்கலையின், என்.எஸ்.எஸ்., என்ற தேசிய மாணவர் இயக்கத்தினர் பலர், மீட்பு மற்றும் முதலுதவி பணிகளில் ஈடுபட்டனர்.
சிறப்பு பயிற்சி:
இந்நிலையில், வெள்ள தடுப்பு மற்றும் சமாளிப்பு குறித்து, சென்னை பல்கலையின், என்.எஸ்.எஸ்., குழுவினருக்கு, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளரும், புவியியல் துறை பேராசிரியருமான, ஜி.பாஸ்கரன் தலைமையிலான குழுவால், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின், 68 கல்லுாரிகளில் படிக்கும், 1,100 என்.எஸ்.எஸ்., மாணவர்கள், இப்பயிற்சியை பெற்று உள்ளனர்.
செஞ்சிலுவை சங்கம் : வெள்ளத்தில் சிக்குவோரை கயிறு கட்டி காப்பாற்றுவது, ஹெலிகாப்டரில் உணவு, உடை, பொட்டலங்கள் வழங்குவது, இடுப்பில் கயிறு கட்டி, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது. நீரில் மூழ்கியோ அல்லது நீர்சூழ்ந்த இடத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை, மீட்ட தும், அவர்களுக்கு முதல் உதவி அளிக்கும் முறை போன்றவை, செஞ்சிலுவைசங்கத்தின் மூலம் தரப்பட்டுள்ளது.
இது குறித்து, பேராசிரியர் பாஸ்கரன் கூறியதாவது:
பயிற்சி பெற்று, பேரிடர் மேலாண் பணிக்கு செல்ல விரும்புவோரின் பட்டியல், மொபைல்போன் எண் போன்றவை, தனித்தனியாக, மூன்று மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலிருந்து, பயிற்சி பெற்ற மாணவர்களை, மீட்பு பணிக்கு, நேரடியாக அழைத்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.