தரமற்ற தண்ணீர் விற்ற 15 நிறுவனங்கள் 'சீல்' உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!

 மதுரையில் தரமற்ற ௨௦ லிட்டர் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்த ஏழு நிறுவனங்களை 15 நாட்களில் மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை கெடு விதித்துள்ளது.



பசுமை தீர்ப்பாயம்

தமிழகம் முழுவதும் விற்கப்படும் தண்ணீர் கேன்களின் தரத்தை பரிசோதிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த ஜூலை ௧௪ல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மதுரையில் ௨௦ லிட்டர் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யும் பத்து நிறுவனங்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பினர். அவற்றில் ஏழு நிறுவனங்களின் தண்ணீர் தரமற்றது என பரிசோதனையில் தெரிய வந்தது.




இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை கமிஷனரின் உத்தரவுப்படி, தரமற்ற ௨௦ லிட்டர் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்த ஏழு நிறுவனங்களை 15 நாட்களில் மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 40 நிறுவனங்களை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




அதில், ஏழு நிறுவனங்கள் மதுரையை சேர்ந்தவை. நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் மூட மறுக்கும் பட்சத்தில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி 'சீல்' வைப்பர், என்றார்.





சுத்திகரிப்பு முறை

தண்ணீரை கேன்களில் அடைக்கும் முன், முதற்கட்டமாக 'குளோரினேஷன்' முறையில் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அவற்றில் கொல்லப்பட்ட பெரும்பாலான கிருமிகள் 'கார்பன்' வடிகட்டி மூலமாக வடிகட்டப்படுகின்றன. பின்னர், சவ்வூடு பரவல் சுழற்சி முறையில் தேவையற்ற உலோக பொருட்கள் நீக்கப்படுகின்றன. இதன் பிறகும் மீதமிருக்கும் கிருமிகள் உள்ளிட்டவை அல்ட்ரா கதிர்களை செலுத்தி நீக்கப்படுகிறது. தண்ணீரின் ஆயுட்காலத்தை அதிகரிக்க தண்ணீரில் ஆக்சிஜன் செலுத்தப் படுகிறது. கேன்களில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்பும் முன், குளோரின் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி அவை கழுவப்படுகின்றன. மீண்டும் அவை 'மினரல் வாட்டரால்' கழுவப்படுகின்றன. பின்னர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் நிரப்பப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...