பொது வினியோக திட்டத்தில் ஒவ்வொரு மாதமும்... மாவட்டந்தோறும் ரூ.1.75 கோடி 'அபேஸ்!' அளவு குறைந்தால் அதிகாரிகள் 'பாக்கெட்' நிரம்பும்
ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தில் வழங்கும் பொருட்களை, குறைந்த அளவு வழங்குவதன் வாயிலாக, மாதம்தோறும் மாவட்டத்துக்கு, 1.75 கோடி ரூபாயை, அதிகாரிகள், 'காசு பார்க்கும்' அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், ரேஷன்கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' எனும், கருவி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும் பில் போடும் போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன்கார்டுதாரரின், மொபைல்போன் எண்ணுக்கு, 'எஸ்.எம்.எஸ்.,' செல்லும் வகையில், திட்டம்
நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பொருட்கள் வினியோகத்தில், ஊழியர்கள் முறைகேடு செய்ய முடியாத நிலை
உருவாகியுள்ளது. அதே வேளையில், ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட்களின் எடை, குறைவாக இருப்பது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
அம்பலம்
ரேஷன் கடைகளில் இருப்பு குறையும்போது, ஊழியர்களுக்கு அபராதம் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பொருட்களின் எடை குறைவாக இருக்கும் விவகாரத்தில், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையை, ரேஷன் கடை ஊழியர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது:
நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் போன்ற ரேஷன் பொருட்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
மூட்டைக்கு ௩ கிலோ வரை...
அந்த மூட்டைகளில், ஒரு கிலோ முதல், மூன்று கிலோ வரை குறைவாக இருப்பது வாடிக்கையாகி விட்டது. எடை குறைவாக இருப்பதை பலமுறை சுட்டிக்காட்டியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அரசு உத்தரவுப்படி மூட்டைகள், 50 கிலோ 650 கிராம் என்ற எடை அளவில் (கோணிப்பையுடன் சேர்த்து), மாதாமாதம் நுால் மாற்றி தைத்து கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.
மூட்டைகளில், 1 முதல் 3 கிலோ வரை, எடை குறைவாக வழங்கப்படுகிறது. மூட்டைக்கு ஒரு கிலோ என்பது சிறிய அளவாக இருந்தாலும், இதன் மூலம் மாதாமாதம் பெரும் தொகைக்கு முறைகேடு நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கை நனைப்பது யார்?
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஆயிரம் ரேஷன் கார்டு இருந்தால், அந்த கடைக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு என, அனைத்தின் எடையும் ஒரு கிலோ குறைவதன் மூலம்,
கடைக்கு, 13 ஆயிரத்து, 550 ரூபாய் ஊழல் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், 1,300 ரேஷன் கடைகளுக்கு கணக்கிடும் போது, மாதம், 1.75 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. எடை குறைவு அதிகரிக்கும் போது, ஊழல் தொகையும் உயரும். மாநிலம்
முழுவதும் இதே நிலைதான் உள்ளது.
பொதுவினியோக திட்ட பொருட்களை சமச்சீர் செய்து வழங்காமல், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு மாதமும், 56 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 672 கோடி ரூபாயும் ஊழல் நடக்கிறது. இவ்வளவு பெரிய தொகையில் யாரெல்லாம் கைநனைக்கிறார்கள் என்பது
தெரியவில்லை. பிரதிபலன் இருப்பதால், முறைகேட்டை சீர்படுத்தாமல் அதிகாரிகள் குளிர்காய்கின்றனர்.
இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்