பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு!!!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து

செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கான வினாத்தாளில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம் பெறும். அரசு பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வை சமாளிக்கும் வண்ணம், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான முன் அரையாண்டு தேர்வு, வரும், 14ல் துவங்கி, 25 வரை நடத்தப்படும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...