எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 774 வீரர்கள் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகவே இறந்துள்ளனர். எல்லையில் எதிரிகளின் தாக்குதலை எதிர்க்கொள்வதும், அவர்களின் தாக்குதலில் உயிரிழப்பதும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்தான்.
சமீபத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் வீரர்கள் பலர் குண்டுபாய்ந்து வீர மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எல்லைப் பாதுகாப்பு படையினர் 774 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் போர் நடவடிக்கையில் இறந்தது 25 வீரர்கள்தான் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 774 பேரில் 316 பேர் பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக இறந்துள்ளனர். 117 பேர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். எதிரிகளின் தாக்குதலில் அதாவது போரின்போது 25 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சாலை மற்றும் ரயில் விபத்தில் 192 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். எச்ஐவி போன்ற உயிர்கொல்லி நோயால் 18 பேர் இறந்துள்ளனர். மேலும் 38 வீரர்கள் கேன்சர் பாதிப்பாலும், 5 பேர் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.