2019-க்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !!

தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர்
நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.கிருஷ்ணகுமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.



அரசு சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஆஜரானார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி கழிப்பறை களை கட்ட வேண்டும்.

2017- 2018ம் கல்வி ஆண்டில் அனைத்து பெண்கள் பள்ளிகளிலும், அனைத்து இரு பாலர் பள்ளிகளிலும், 2018- 2019ம் கல்வி ஆண்டில் அனைத்து ஆண் கள் பள்ளிகளிலும் கழிப்பறை களை கட்டி முடிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பராம ரிப்பு ஊழியர், இரவுக் காவ லாளி, துப்புரவுப் பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். பராமரிப்புப் பணியில் மாணவர் களை ஈடுபடுத்தக் கூடாது.

மாணவிகளுக்கு தரமான நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும். ஓராண் டில் அனைத்துப் பள்ளிகளிலும் நாப்கின் எரியூட்டு தளம் அமைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும். சமூக விரோத செயல்களை தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் 3 ஆண்டுகளில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...