சுங்கச்சாவடிகளில் 24–ந் தேதி வரை கட்டண வசூல் இல்லை !

கால அவகாசம் மேலும் நீட்டிப்பு சுங்கச்சாவடிகளில் 24–ந் தேதி வரை கட்டண வசூல் இல்லை மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்.

புதுடெல்லிதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 24–ந் தேதி வரை கட்டண வசூல் கிடையாது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.பணம் இல்லை

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக
குறைந்துள்ளது. மேற்படி நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு தொடர்ந்து அலையும் மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட போதுமான பணம் இல்லை.எனவே மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், புதிய நோட்டுகள் பெறுவதற்கான வசதிகளையும் அறிவித்து வருகிறது. இதில் முக்கியமாக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து உள்ளது.அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்ய முடியாமலும், சில்லரை கொடுக்க முடியாமலும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன.எனவே சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கடந்த 9–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த கால அவகாசம் 14–ந் தேதி வரையும், தொடர்ந்து 18–ந் தேதி (இன்று) வரையும் நீட்டிக்கப்பட்டது. இந்த சலுகையை மத்திய அரசு மேலும் நீட்டித்து உள்ளது.24–ந் தேதி வரை

வாகனங்களின் நிலையான இயக்கம் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 24–ந் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசு பொறுத்துக்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...