மாயமான மாணவியர் 3 பேர் ஊட்டியில் மீட்பு !!

மாயமான, பிளஸ் 2 படிக்கும் மூன்று மாணவியர், ஊட்டியில் மீட்கப்பட்டனர்.

சேலம், வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப்பிரிவில் படிக்கும், 17 வயதுடைய, மூன்று மாணவியர், நேற்று முன் தினம், மாயமாகினர். பெற்றோர் புகாரை அடுத்து, வாழப்பாடி போலீசார்,
மூவரையும் தேடி வந்தனர்.நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில், ஊட்டி பஸ் ஸ்டாண்டில், மாணவியர் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி அனைத்து மகளிர் போலீசார், அவர்களை மீட்டு, சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சேலம் நீதிமன்றத்தில், இன்று மாணவியர் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர். பின், அவர்கள் மாயமான காரணம் தெரியவரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...