குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை !!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:

● மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை ● மொபைல் போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில் அனுமதிக்கப்படாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...