சென்னை, 400 ஊழியர்கள் மூலம் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய முயன்றதை யொட்டி சென்னை செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இதில் கணக்கில் காட்டாத ரூ.8 கோடி சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கணக்கில் காட்டாத பணம்
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8–ந்தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த நிலையில் தங்களிடம் இருக்கும் பணத்தை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி வருகிறார்கள். ஆனால் சிலர் கணக்கில் காட்டாத பணத்தை தங்களுடைய வங்கி கணக்கில் செலுத்தி பணம் மாற்ற முடியாமல் வேறு வழியில் அந்த பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வாறு ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர்.400 ஊழியர்கள் மூலம் பணம் டெபாசிட் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி நிர்வாகம் கணக்கில் காட்டாத பணத்தை தங்கள் கல்லூரியில் பணியாற்றும் ஏறத்தாழ 400 ஊழியர்களின் வங்கி கணக்கில் ‘டெபாசிட்’ செய்து மாற்றி தருமாறு கூறியதாக தெரிகிறது.இதையடுத்து கல்லூரி ஊழியர்கள் கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என பணத்தை ‘டெபாசிட்’ செய்தனர்.அதுமட்டுமல்லாது அவர்கள் தங்கள் மனைவி, தாயார் மற்றும் தங்களுடைய உறவினர்களின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலும் பணத்தை ‘டெபாசிட்’ செய்துள்ளனர். சிலர் பணத்தை ‘டெபாசிட்’ செய்வதற்காக கையில் வைத்து இருந்தனர்.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஒரே கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள் வங்கியில் அடுத்தடுத்து பணம் செலுத்தியது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கல்லூரி ஊழியர்கள் டெபாசிட் செய்த சம்பந்தப்பட்ட வங்கிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினார்கள்.அதன்பின்னர், வங்கி கணக்கில் ‘டெபாசிட்’ செய்ய வந்த ஊழியர்கள் பணிபுரியும் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர் நேரில் சென்று சோதனை நடத்தினார்கள்.பணத்தை வங்கியில் ‘டெபாசிட்’ செய்த கல்லூரி ஊழியர்களிடம் எப்படி உங்களுக்கு இந்த பணம் வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.ரூ.8 கோடி அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினார்கள். விசாரணையில், கல்லூரி நிர்வாகம் தங்களுடைய ஊழியர்களிடம் கணக்கில் காட்டாத பணத்தை கொடுத்து அவர்களுடைய வங்கி கணக்கில் ‘டெபாசிட்’ செய்ய சொன்னதாகவும், அதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வங்கியில் ‘டெபாசிட்’ செய்ய சொல்லி கொடுத்த பணத்தை ‘டெபாசிட்’ செய்யாமல் வைத்திருந்த ஊழியர்களிடம் இருந்து ரூ.45 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கணக்கில் காட்டாத பணத்தை கல்லூரி ஊழியர்களின் வங்கி கணக்கில் ‘டெபாசிட்’ செய்ததால் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வங்கி கணக்கு புத்தகத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இதுதொடர்பாக செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி தலைவர், கல்லூரி நிர்வாகிகள், அதிகாரிகள், ஊழியர்களிடம் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவர்களிடமும் சோதனை இதுமட்டுமில்லாமல், செயின்ட் ஜோசப் கல்லூரியின் மற்றொரு கல்லூரியான தொழில்நுட்ப கல்லூரியின் அலுவலகத்திலும், கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களின் உடமைகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–இதுபோல் அடுத்தவர்களுக்காக வங்கி கணக்கில் பணத்தை ‘டெபாசிட்’ செய்வதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது சட்ட விரோதமான குற்றங்களுக்கு துணை போவது ஆகும். எனவே பொதுமக்கள் அவர்களுடைய பணத்தை மட்டும் டெபாசிட் செய்ய வேண்டும்.அடுத்தவர்களின் பணத்தை டெபாசிட் செய்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.