4ஜி சேவையை வலுப்படுத்த பி.எஸ்.என்.எல். முடிவு!

கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஏலத்தில் 700, 800, 1,800, 2,100, 2,300 மற்றும் 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 4ஜி சேவைக்கு மிகவும் முக்கியமான

அலைக்கற்றையான 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அதிக விலையில் நிர்ணயிக்கப்பட்டதால் ஏலத்தில் எந்த நிறுவனமும் வாங்க முயற்சிக்கவில்லை. இதனால் இந்த வகை ஸ்பெக்ட்ரம் யாராலும் வாங்கப்படாமலே ஏலம் நிறைவடைந்தது.

700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பொருத்தவரை 1 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ரூ.11,485 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 700Mhz அலைக்கற்றையை கைப்பற்ற யாரும் முன்வரவில்லை. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த வருவாயை ஈட்ட முடியவில்லை. பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 700Mhz அலைக்கற்றைக்கான விலையை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு கட்டுப்பாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது 4ஜி சேவையை விரிவுபடுத்த 5Mhz அளவிலான 700Mhz அலைக்கற்றையை ஒதுக்குமாறு தொலைத்தொடர்பு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "5Mhz அளவிலான 700Mhz அலைக்கற்றையை கேட்டு மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போதைய நிலையில் எங்களிடம் 4ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று எங்களுக்கு 700Mhz அலைக்கற்றையை ஒதுக்கினால் அத்துடன் 2,500Mhz அலைக்கற்றையை இணைத்து எங்களது 4ஜி சேவையை வலுப்படுத்தி நாடு முழுவதிலும் 4ஜி சேவையை வழங்க முடியும்” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...