புதுடெல்லி,5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்புகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., மசோதாவை மத்திய அரசு கொண்டு
வந்தது. ஜிஎஸ்டி வரிகளை இறுதி செய்ய இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் கூட்டம் கூடியது.இந்தக் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் வரிகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அருண் ஜெட்லி, ''அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். மற்ற பொருட்களின் மீது நிலையான வரி விதிப்பாக 12%, 18% இருக்கும்..புகையிலைக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். காஸ் அதிகளவில் இருக்கும் குளிர்பானங்களுக்கு இதேபோன்று வரி விதிக்கப்படும்'' என்றார்.