500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!!!

புதுடெல்லி, 500, 100 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,  மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது

. இவ்விவகாரத்தில் மக்கள் சந்தித்து வரும் சிரமத்தினை தணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக அபிடவிட்டை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய பெஞ்ச், “நாங்கள் எந்தஒரு தடையும் வழங்கப்போவது கிடையாது,” என்றது. சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்கள் மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுத்தியதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு தடை கிடையாது என்பதை தெளிவாக கூறிஉள்ளது.500, 1000 ரூபாய் தடைக்கு எதிராக மனுதாக்கல் செய்தவர்களில் ஒருவருக்கு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். அப்போது  மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை விதிக்க கேட்கவில்லை, இருப்பினும் இவ்விவகாரத்தில் பொதுமக்கள் சந்தித்து வரும் சிரமத்தினை நீக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்பது தொடர்பாக பதிலை கோரினார். இதனையடுத்து இவ்விவகாரத்தில் மக்கள் சந்தித்து வரும் இடர்பாடுகளை தணிக்க மத்திய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக ’அபிடவிட்’டை தாக்கல் செய்ய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் பெஞ்ச் கேட்டுக் கொண்டது.இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கோ, ரிசர்வ் வங்கிக்கோ எந்தஒரு நோட்டீசும் விடுக்காமல், வழக்கு விசாரணையை 25-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...