ரூபாய் நோட்டுகளில் வேறுபாடு; புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாக செல்லும் என ஆர்.பி.ஐ. அறிவிப்பு!!!

புதுடெல்லி, ரூபாய் நோட்டுகள் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாக செல்லும் என்று ஆர்பிஐ அறிவித்து உள்ளது.நாட்டில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளில் காணப்படும் வேறுபாடு காரணமாக மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்து உள்ளது. ஒரு 500

ரூபாயில் மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்ட புகைப்படத்தின் படி அனைத்து அம்சங்களும் இடம்பெற்று உள்ளது.மற்றொரு புதிய 500 ரூபாயில் மையத்தில் இடம்பெற்று உள்ள மகாத்மா காந்தியின் முகத்திற்கு அருகே அதிகமான அளவு நிழல் இடம்பெற்று உள்ளது. இடது புறத்தில் டிசைனிங்கில் மாற்றம் இருப்பது தெளிவாக தெரிகிறது. வலது புறத்தில் தேசியச் சின்னம் முறையாக இடம்பெற வில்லை என்பது தெரிகிறது. இதுபோன்று மத்தியில் அமைந்து உள்ள பாதுகாப்பு அம்சம் நிறைந்த கோடு மற்றும் மகாத்மா காந்தியின் காது அருகே பொறிக்கப்பட்டிருக்கும் 500 ரூபாய் என்ற எழுத்து போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் இடத்தின் அளவும், அதற்கு மேற்பகுதியிலும் டிசைனிங்கில் அதிகளவு மாற்றம் காணப்படுகிறது. இதேபோன்று ரூபாய் நோட்டு எண் வரிசையிலும் மாற்றம் உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்து உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் அவசரம் அவசரமாக அச்சிடப்பட்டதால் தவறு நேரிட்டு உள்ளது என்றது.  ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவலா பேசுகையில், இப்போது ஏற்பட்டு உள்ள ரூபாய் நோட்டு நெருக்கடியால், ரூபாய் நோட்டுகள் அவசரம் அவசரமாக அச்சிடப்பட்டதால் தவறு நேரிட்டு இருக்கலாம். பொதுமக்கள் இதுபோன்ற நோட்டுகளை பண பரிமாற்றத்தின் போது சுதந்திரமாக பெறலாம் அல்லது ரிசர்வ் வங்கியிடம் வழங்கலாம்,” என்றார். இது வேறுபாடு கிடையாது. மில்லியன் அளவிலான ரூபாய் நோட்டுகளில் ஏதாவது ஒரு நோட்டில் இது நேரிட்டு இருக்கும். இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் ரிசர்வ் வங்கிடம் கொடுத்துவிடலாம், அதே மதிப்பிலான பணத்தை நாங்கள் திருப்பி கொடுப்போம்,” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இதுபோன்று மும்பை சேர்ந்த முன்னாள் வங்கி பணியாளர், “2000 ரூபாய் நோட்டுகளில் உள்ள நிழல்களின் நிறமானது மாறுபட்டு உள்ளது என்று கூறிஉள்ளார். இரு வங்கியில் நான் வாங்கிய 2000 ரூபாய் நோட்டுகளில் வேறுபட்ட நிழல்கள் இடம்பெற்று உள்ளது,” என்று கூறிஉள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...