புதிய ரூ.500 நோட்டுகள் ஓரிரு நாளில் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
புதிய ரூ.500 நோட்டுகள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் ரிசர்வ் வங்கிஅதிகாரிகள் கூறினர்.இந்தப் பணம் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்துள்ளதாகவும், அவை வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.