50 நாட்களுக்கு பிறகு போனில் பேசினார் ஜெயலலிதா !!

 இரங்கல் தெரிவித்ததாக விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் தகவல்
முதல்மைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக போனில் பேசினார். விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு அவரது மகனிடம் பேசி இரங்கலை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த செப்.22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் உடல் நலக்குறைவு காரணமாக அவரது பொறுப்புகள் ஓபிஎஸ் வசம் மாற்றப்பட்டது.

பின்னர் அவர் பெயரில் மட்டுமே அறிக்கைகள் வெளிவந்தன. இதனால் முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் கிளப்பட்டது. ஆனால் அவைகளை பொய்யாகி உடல் நலம் தேறினார். அரவக்குறிச்சி வேட்பாளர் அங்கீகார கடிதத்தில் கைரேகை பதித்தார்.



அதை பற்றியும் விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் நேற்று தான் பூரண நலம் பெற்றதாக கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டார். இன்று அதிமுக அமைப்புச்செயலாளர் மறைவுக்கு தனது கையெழுத்திட்ட இரங்கல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் விசாலாட்சி நெடுஞ்செழியன் மகனிடம் போனில் தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா அவரது தாயார் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இந்த தகவலை விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...