மின் கட்டணம் செலுத்த மறுப்பு: அரசு துறைகள் ரூ.664 கோடி பாக்கி!!

குடிநீர் வாரியம், போலீஸ், பொதுப்பணி உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மின் கட்டணம் செலுத்தாமல், 664 கோடி ரூபாய், மின் வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளன.

தமிழகத்தில், வீடு, தொழிற்சாலைகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு,

60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. குறித்த காலத்திற்குள், மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை, மின் வாரியம் துண்டிக்கிறது.அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது.


1
2
வீடு, தொழிற்சாலை, வர்த்தகம் உள்ளிட்ட மின் நுகர்வோர்கள், குறித்த காலத்தில், கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், உள்ளாட்சி அமைப்பு, அரசு துறைகள் கட்டணம்செலுத்தாமல், இழுத்தடித்து வருகின்றன. இதனால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியத்துக்கு, கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது.

அதிக விலை

இதுகுறித்து, மின் வாரிய நிதி பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் வாரியத்துக்கு, ஆண்டுதோறும் கட்டணம், அரசு மானியம் மூலம், 49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது; ஆனால், செலவு, 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.
இதனால், வருவாய் பற்றாக்குறைஏற்படுகிறது. தற்போது, செலவை குறைக்க, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி வாங்குவதில்லை. குறித்த காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பயந்து, பலரும் கட்டணம் செலுத்துகின்றனர்.


நிதி நெருக்கடி


ஆனால், அரசு துறைகளின் செலவுக்காக, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும், மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளும், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை, வேறு பணிக்கு செலவிடுகின்றன.

எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி, அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...