காற்று மாசுபாடு காரணமாக டில்லி தவித்து வரும் நிலையில், இந்தியாவில் 94 நகரங்களில் காற்று மாசடைந்த நிலையில் உள்ளது.
மோசம்:
இது தொடர்பாக நடந்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள 94 நகரங்களில், தேசிய காற்று தர நிர்ணயப்படி சுத்தமான காற்று இல்லை. இவற்றில் பெரும்பாலான நகரங்கள்,
கடந்த 1990ம் ஆண்டு முதல் காற்று மாசடைவது தொடர்பான பட்டியலில் உள்ளன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உலகில் உள்ள மோசமான காற்று குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 20 நகரங்களில், இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்பாட்டு அமைப்போ அல்லது அதிகாரிகளோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.
கவலையில்லை...:
கடந்த பல வருடங்களாக, இமாச்சல பிரதேசத்தின் பர்வானோ, சத்தீஸ்கரின் கோர்போ நகரங்கள் மோசமான காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட அந்நகரங்கள் அதிகளவில் மாசடைந்துள்ளன. டில்லி, கான்பூர், லக்னோ, வாரணாசி நகரங்களிலும், மோசமான அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது. காற்றின் தர நிர்ணயம் குறித்து சிபிசிபி என்படும் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு அமைப்பு கவலைப்படவில்லை. காற்று மாசுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டில் குழந்தைகள் பாதிக்கப்பட்டது குறித்தும் அந்த அமைப்பு கவலைப்படவில்லை. பரிதாபாத், ஆக்ரா, கான்பூர் நகரங்களும் மோசமான காற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.