சென்னை தனியார் பள்ளியின் இயக்குநரை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கேளம்பாக்கம் அருகே, ஏகாட்டூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு
நிறுவனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் சி.பி.எஸ்.இ, ஐ.ஜி.எஸ்.சி.இ., மற்றும் ஐ.பி.டி.பி. என மூன்று பாடத்திட்டப் பிரிவுகளின்கீழ் இயங்குகிறது. இங்கு, 1,600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், ஓராண்டுக்குமுன் அயல்நாட்டைச் சேர்ந்த எம்.இ.கர்னே என்பவரை பள்ளி நிர்வாகம் இயக்குநராகப் பணியமர்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை இப்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் பள்ளியின் இயக்குநரை பணிநீக்கம் செய்யக்கோரியும் பள்ளிமுன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சிலதினங்களுக்கு முன், சி.பி.எஸ்.இ. பள்ளியின் தலைமை ஆசிரியர் வசுமதி ஸ்ரீனிவாசன், இயக்குநருக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.பி.டி.பி மாணவர்களைப் போலவே சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு அதிகளவில் பணம் கட்டப்படுகிறது. ஆனால் அவர்களைவிட சி.பி.எஸ்.இ. மாணவர்களிடையே நிர்வாகம் பாரபட்சம் பார்க்கிறது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரின் பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி இயக்குநர் ஆசிரியர்களை மாணவர்கள்முன்பு, தகாத வார்த்தைகளைக் கூறி திட்டுகிறார். பாலியல்ரீதியாகவும் துன்புறுத்துகிறார் என ஆசிரியர்கள் அவர்மீது குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த அவர், நம் நாட்டின் தேசியத் தலைவர்களையும் தேசிய கீதத்தையும் அவமதிக்கும்வகையில் நடந்துகொள்கிறார். பள்ளி மாணவியரை தகாத வார்த்தைகளால் பேசுகிறார். தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியையும் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார். எனவே இயக்குநரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியையும் ஆசிரியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இயக்குநர்மீது முறையான நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.