மின்கட்டணம் வசூலிக்க தனியார் முகவர்கள் எவரையும் மின்சார வாரியம் நியமிக்கவில்லை, தேவையில்லாத நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
ஏமாற வேண்டாம்
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை இணையதளம் மற்றும் நேரடியாக செலுத்தலாம். ஆனால் சில தனியார் முகவர்கள் மின்வாரியத்தின் அனுமதியின்றி வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
இது சட்டத்திற்கு புறம்பானது. விளம்பரம் செய்து அவ்வாறு வசூலிக்கும் எந்தவொரு வசூல் முகவர்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் நியமனம் செய்யவில்லை. மின்நுகர்வோர்கள் அவர்களிடம் ஏமாற வேண்டாம்.
பணம் செலுத்தும் வசதி
குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் அருகில் மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் வசதியும் செய்து தரப்பட்டு உள்ளது. அத்துடன் தமிழக அரசின் எல்லா இ–சேவை மையங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் சிட்டி யுனியன் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகிய மூன்று வங்கி கிளையிலும் மின்சார கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சிட்டி யுனியன் வங்கி, கருர் வைஸ்யா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் ‘மொபைல் ஆப்ஸ்’ (மொபைல் ஆப்ளிகேசன்) மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஏ.டி.எம்.களிலும் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முகவர்கள் நியமிக்கப்படவில்லை
மின்சார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உபயோகிப்பாளர்களின் வலைதளம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், மின்சார வாரியத்தின் இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் மின்கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே மின்கட்டணம் செலுத்தியவர்களாக கருதப்படுவார்கள்.
இவர்களை தவிர வேறு எந்த தனியார் முகவர்களுக்கும் மின்கட்டணத்தை வசூலிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தனியார் முகவர்கள் மூலம் பணம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.