அசம்பாவித சூழ்நிலைகளை கையாள, போலீசாருக்கு வழிகாட்டும் வகையிலான ஆவணங்கள் கிடைப்பதற்கு, அரசாணை பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க., தலைவர் மணி தாக்கல் செய்த மனு:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 2013 ஏப்ரலில், 'சித்திரை முழு நிலவு இளைஞர் விழா' நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களை, ஒரு கட்சியினர் தடுத்தனர்; கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், எங்கள் கட்சியை சேர்ந்த இருவர்
கொல்லப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில்சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை கோரி, பா.ம.க., தலைவர் ராமதாஸ் தலைமையில், போராட்டம் நடத்த முற்பட்ட போது, அவரை கைது செய்து, காவலில் வைத்தனர்.
பா.ம.க.,வினர், 100க்கும் மேற்பட்டோரை,
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். மரக்காணம் வன்முறை சம்பவம், சட்ட விரோத கைது, அதிகார துஷ்பிர யோகம் குறித்து, நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
சுமூக சூழ்நிலை
இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
சம்பவம் நடந்து காலம் கடந்து விட்டதால், தற்போது பதற்றம் தணிந்துள்ளதாகவும், சுமூகமான சூழ்நிலை நிலவுவதாகவும், மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கூறினார். சமூகத்தில் ஜாதி ரீதியான பிளவு ஆழமாக இருப்பதால், மீண்டும் ஒரு சூழ்நிலை ஏற்படலாம் என, தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இத்தகைய சூழ்நிலையை, எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து, பரிசீலிக்க வேண்டிய தன் அவசியத்தையும், மூத்த வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். அதே நேரத்தில், மனுவில் கோரிய நிவாரணத்தை வலியுறுத்தவில்லை.அசம்பாவித சூழ்நிலைகளை, போலீசார் எப்படி கையாள வேண்டும் என்பதற்கான, வழிமுறைகள் அடங்கிய ஆய்வு கட்டுரை, உச்ச நீதிமன்ற உத்தரவுகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிமுறைகளையும் தாக்கல் செய்துள்ளார்.
சமூக பொறுப்பு
மாநிலத்தில் அடிக்கடி இத்தகைய சம்பவங்கள்
நடப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, அரசும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.உள்துறை செயலர் இதைஆராய்ந்து, போலீஸ் துறையின் அடிமட்டத்தில், இந்த ஆவணங்களை சுற்றுக்கு விட, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
அப்போது தான், இத்தகைய சூழ்நிலைகளில் போலீசார் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு, இந்த ஆவணங்கள் வழிகாட்டும் வகையில் இருக்கும். எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்களை தவிர்க்க, கட்டுப்படுத்த, இவை உதவியாக இருக்கும் என, நாங்கள் நம்புகிறோம்.
நாட்டின் குடிமக்கள்,தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், இதுபோன்ற சம்பவங்கள், போலீசாரின் தலையீடுகள் எழாது. போலீசாருக்கும், சமூக பொறுப்புணர்வு உள்ளது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.