ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ரத்து செய்யும் போது,'பான் கார்டு, ஆதார் கார்டு' அவசியம் வழங்க வேண்டும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண தட்டுப்பாடு காரணமாக, ரயில் பயணிகள் பலர், முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர். இதற்கு, தெற்கு ரயில்வே புதிய நடைமுறையை
அறிவித்துள்ளது. இதன்படி, ரயில்வே முன்பதிவு மைய கவுன்டர்களில், ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் முன்பதிவு செய்தோர், டிக்கெட்டை ரத்து செய்யும் போது, பான் கார்டு அல்லது ஆதார் கார்டு நகலில், கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.இதற்கான ரசீது உடனே தரப்படும். உரிய நடைமுறைகளுக்குப்பின், டிக்கெட் கட்டணம், பயணிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.