ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நடத்தாததால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணியில், இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், புழக்கத்தில் உள்ள
காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்படுகிறது.
ஆய்வு கூட்டம்
ரேஷன் வினியோகம் தொடர்பாக, மாதம் தோறும், உணவு துறை அமைச்சர் காமராஜ்
தலைமையில், ஆய்வு கூட்டம் நடக்கும். அதில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் உட்பட, பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அடுத்த மாதத்திற்குள், ஸ்மார்ட்கார்டு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவற்றை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காத்திருப்பு
இம்மாதத்தில், ஆய்வு கூட்டம் நடக்காததால், திட்டம் தொடர்பாக, அமைச்சரின் முடிவை எதிர்பார்த்து, அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதார் விபரம் தராமல், சிலர் அலட்சியமாக உள்ளதால்,ஸ்மார்ட் கார்டு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை வழங்கியோருக்கும், ஸ்மார்ட் கார்டு தர முடியவில்லை. எனவே, ஆதார் விபரம் வாங்க, காலக்கெடு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கு, அமைச்சரிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காததால், ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் என்ன செய்வது என, தெரியவில்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் இருந்ததால், ஆய்வு கூட்டம் நடக்கவில்லை. தற்போது, தேர்தல் முடிந்ததால், அவருடன் பேசி, திட்டத்துக்கு இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்