அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொல்னால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர் பின்புலமாக இருந்துள்ளார்.

டிரம்ப் வெற்றி :அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட்

டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்த போதும், அவை அனைத்தையும் பொய்யாக்கி, 279 ‛எலக்டோரல் காலேஜ்' எனும் மாகாண வேட்டபாளர்களின் ஓட்டுக்களை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.

இருந்தபோதும் ஹிலாரியை விட டிரம்ப் 1.5 லட்சம் குறைவே. ‛எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகளே டிரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற வைத்தது. அமெரிக்காவின் 45வது அதிபராக 2017 ஜனவரி, 20ல், டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.

பின்புலத்தில் இந்தியர்:

டிரம்பின் வெற்றியை எளிதாக்கிய முக்கிய மாகாணங்களில் ஒன்றான அரிசோனாவில், அவரது பிரசாரத்தை செயல்படுத்தியவர் அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர். இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். லக்னோ ஐ.ஐ.எம்., பல்கலையில் எம்.பி.ஏ., படித்த இவர் கல்லூரியில் படித்த போதே குழுக்களை ஒருங்கிணைத்து பிரசாரத்தை செயல்படுத்துவதில் திறமை பெற்றிருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு விடுமுறையை கழிக்க தனது மனைவியுடன் அரிசோனா சென்ற அவினாஷ், அங்கு நடைபெறவிருந்த தேர்தலில் இறங்கி வேலை செய்ய முடிவு செய்தார். அதற்காக அங்கு கவர்னர் வேட்பாளர் பட்டியலிலிருந்த டோக் டூஸி என்பவரை அணுகி அவரது வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கி அவரை வெற்றி பெற வைத்தார். பின் அரிசோனா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நிர்வாக இயக்குனராக கடந்த ஆண்டு அவினாஷ் நியமிக்கப்பட்டார்.

திட்டமிட்ட செயல்பாடு:

டிரம்ப் வெற்றி குறித்து அவினாஷ் தெரிவித்ததாவது: அரிசோனா மாகாணத்தில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்ததில் மிக்க மகிழ்ச்சி. வெற்றியால் ட்ரம்ப் மகிழ்ச்சியில் உள்ளார். இது மிகக் கடினமான வேலை என அவருக்குத் தெரியும். ஆனால் திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. கடைசி கட்டத்தில் எங்கள் ஆதரவாளர்களை திரட்டியதே எங்களுக்கு வெற்றி தேடித்தந்தது.

டிரம்ப் மீதான வீடியோ சர்ச்சை, ஹிலாரிக்கு ஆதரவாக வந்த கருத்துக்கணிப்பு என அனைத்தையும் மீறி பெற்ற இந்த வெற்றி மிகப் பெரியது. இத்தனைக்கும் தேர்தலுக்காக ஹிலாரி செலவு செய்ததில் பாதி தான் எங்கள் செலவு. ஹிலாரியின் செலவு 2 டாலர் எனில், எங்களது செலவு 1 டாலர் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...