அரசாங்க அதிகாரிகளை விசாரணைகளில் இருந்து பாதுகாக்க உதவிகரமாக இருக்கும் என ஊழல் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அரசு அதிகாரிகளை தேசிய புலனாய்வுத் துறையினரின் விசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் மற்றும் திருத்தம்
கொண்டுவர மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மத்திய புலனாய்வுத் துறையினர் அரசாங்க அனுமதிபெற்ற பின்னரே அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடியும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற பாராளுமன்ற அமர்வுகளில் பாராளுமன்ற திருத்த மசோதா அறிமுகப்படுத்த முடிவு செய்திருப்பதாக மாநில அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியிருக்கிறார். அதன்படி, அனைத்துப் பிரிவு அரசு ஊழியர்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு ஒரு விதி கொண்டு வரப்படுகிறது. அதன்மூலம் நேர்மையான அதிகாரிகள் வீண் தொந்தரவுகளுக்கு உள்ளாவதைத் தடுக்கலாம்.
எனினும் ஒரு அரசு அதிகாரி, தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காக விதிமீறலில் ஈடுபட்டு அதை ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் சிபிஐ அல்லது வேறு புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதியைக் கோர வேண்டியதில்லை. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நடத்தப்பட்ட மாநிலங்களவை கூட்டத்தில் இந்த ஊழல் ஒழிப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த ஏப்ரல் 2015இல் அங்கீகாரம் அளித்த அமைச்சரவைக் குழு பின்னர், டிசம்பர் 2015இல் அந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.